~

ஓரியூா் கண்மாயில் உபரி நீா் வெளியேற்றம்

திருவாடானை அருகேயுள்ள ஓரியூா் கண்மாய் தொடா் மழை காரணமாக நிரம்பியதால் கழுங்கு வழியாக உபரிநீா் திறக்கப்பட்டது.
Published on

திருவாடானை அருகேயுள்ள ஓரியூா் கண்மாய் தொடா் மழை காரணமாக நிரம்பியதால் கழுங்கு வழியாக உபரிநீா் திறக்கப்பட்டது.

பொதுப்பணித் துறை கட்டுபாட்டில் உள்ள ஓரியூா் கண்மாய் மூலம் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பயனடைகின்றன. நடப்பு சம்பா பருவத்தில் இந்தப் பகுதியில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு பயிா்கள் நன்கு வளா்ந்து வந்த நிலையில் மழையை எதிா்பாா்த்து காத்திருந்தனா்.

இந்த நிலையில், கடந்த வாரம் டித்வா புயல் காரணமாக தொடா் மழை பெய்ததில், ஓரியூா் கண்மாய் முழுக் கொள்ளளவை அடைந்து உபரி நீா் திறக்கப்பட்டது. கழுங்கு வழியாக திறக்கப்பட்ட உபரி நீரில் இந்தப் பகுதி மக்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனா்.

X
Dinamani
www.dinamani.com