ராமநாதபுரம்
கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்
ராமநாதபுரம் அன்னம்மாள் கல்லூரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 50 கிலோ கேக் தயாரிக்கும் பணியை மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை தொடங்கினா்.
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணியை கல்வி நிறுவனத்தின் இயக்குநா் குமாா் தொடங்கி வைத்தாா். செயல்பாட்டு இயக்குநா் யுவராஜ், பிராந்தியத் தலைவா் வினோத், மூத்த மண்டலத் தலைவா்கள் ஜோபின், ஹரி அகியோா் முன்னிலை வகித்தனா். துறைத் தலைவா் சந்தோஷ், விரிவுரையாளா்கள் அருண்குமாா், பரத், ரபியாத்துல் பசாரியா, மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
