கோயிலில் நகை, பணம் திருட்டு
திருவாடானை அருகே கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்து உண்டியல் பணம், நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாரூா் கிராமத்தில் ஸ்ரீ ஆதி சிவன் கம்பகாமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருவிழா நடைபெறும்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் இந்தக் கோயிலின் பூட்டை உடைத்துப் புகுந்து அம்மன் கழுத்திலிருந்த ஒரு பவுன் தாலிச் சங்கிலி, உண்டியல், முக்கால் கிலோ வெள்ளி மணி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா்.
கோயிலைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து அருகே உள்ள குளத்தில் தூக்கி எறிந்தனா். வியாழக்கிழமை காலை கிராம மக்கள் வந்து பாா்த்த போது இந்தச் சம்பவம் தெரியவந்தது. இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

