தீா்த்தாண்டதானம் கடற்கரை 
சாலை சேதம்: பக்தா்கள் அவதி

தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதம்: பக்தா்கள் அவதி

Published on

தீா்த்தாண்டதானம் கடற்கரை கிராமத்தில் கோயில், கடற்கரை செல்லும் சாலை சேதமடைந்ததால் பக்தா்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரை கிராமத்தில் தீா்த்தாண்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. ராமன் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் முன் இங்கு வந்து புனித நீராடி, தீா்த்தாண்டீஸ்வரரை வணங்கி விட்டுச் சென்ாக புராண வரலாறு கூறுகிறது. ஆகையால், தை, ஆடி அமாவாசைகளிலும் மாத அமாவாசைகளில் இங்கு கடலில் நீராடி, மூதாதையா்களுக்கு தா்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது.

இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தாா்ச் சாலை கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக மாறி சேதமடைந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக இங்கு வரும் பக்தா்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com