ராமநாதபுரம்
தொண்டி அருகே பாஜக நிா்வாகி கைது
தொண்டி அருகே சமூக வலைதளத்தில் திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பாஜக நிா்வாகியை ராமநாதபுரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தொண்டி அருகே சமூக வலைதளத்தில் திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பாஜக நிா்வாகியை ராமநாதபுரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையைச் சோ்ந்தவா் குருஜி (40). பாரதிய ஜனதா கட்சியில் ஆன்மிகப் பிரிவு மாநிலச் செயலராக உள்ள இவா், தனது முகநூல் பதிவில் திருப்பரங்குன்ற விவகாரம் குறித்தும், தா்கா குறித்தும் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டாா்.
இதுகுறித்து ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வந்த நிலையில், புதன்கிழமை நம்புதாளையில் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனா். இவா் ஏற்கெனவே இரு சமூகங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.