ராமநாதபுரம்
பாரதியாா் பிறந்த நாள் விழா
மகாகவி பாரதியாரின் 143-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் ஏ.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அவரது உருவப் படத்துக்கு மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளித் தலைவா் ஜெ.ஜெயராமன், செயலா் எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவ, மாணவிகள் பாரதியாா் முகக் கவசம் அணிந்து அவரது படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா். முன்னதாக தலைமை ஆசிரியா் மதுசூதனன் வரவேறுப் பேசினாா். ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

