ராமநாதபுரம்
அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ‘எழுத்தாளுமை விருது’
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ‘எழுத்தளுமை விருது’ வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அறிஞா் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை சாா்பில், மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடலாடியை அடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் கிறிஸ்து ஞான வள்ளுவனுக்கு ‘எழுத்தாளுமை விருதை’ அறக்கட்டளைத் தலைவா் திருமலை முத்துச்சாமி, கோவில்பட்டி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் ரா.பாஸ்கரன் ஆகியாா் வழங்கினா்.

