ஆசிரியா்களுக்கான மேம்பாட்டு
கருத்தரங்கம் நிறைவு

ஆசிரியா்களுக்கான மேம்பாட்டு கருத்தரங்கம் நிறைவு

கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியா்களுக்கான மேம்பாட்டுக் கருத்தரங்கத்தில் பங்கேற்றவா்கள்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியா்களுக்கான மேம்பாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் முனைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஐ.சி.டி. அகாதெமி பயிற்சியாளா் அா்ஜுன் விஜயன் கலந்து கொண்டு ‘புதிய யோசனை உருவாக்கும்’ எனும் தலைப்பில் பயிற்சிகளை அளித்தாா்.

3 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு பல்வேறு கல்லூரிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பேராசியா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லூரி துணை முதல்வா் முனைவா் பெரோஸ் கான் வரவேற்றாா். அறக்கட்டளை தலைவா் முகமது சதக் வாழ்த்துத் தெரிவித்தாா்.

இந்தக் கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை பேராசியா்கள் சாஹுல் ஹமீது, விக்னேஷ் குமாா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com