~
~

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் அஷ்டமி சிறப்பு பூஜை

அஷ்டமியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள கால பைரவா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் அஷ்டமியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் காா்த்திகை மாத அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு வேத பாராயணங்கள் முழங்க யாக சாலை பூஜை நடைபெற்றது.

முன்னதாக, புனித நீா் குடங்களில் வைத்து பூஜிக்கப்பட்டன. பின்னா், இந்த புனித நீரால் காலபைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com