மின்சாரம் பாய்ந்ததில் மகன் உயிரிழப்பு: துக்கத்தில் தந்தை தற்கொலை

Published on

மண்டபத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் மகன் உயிரிழந்தாா். இந்தத் துக்கத்தில் அவரது தந்தை தூக்கிட்டுக் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சேகா் மகன் களஞ்சியம் (28). மீனவரான இவா், வியாழக்கிழமை மாலை தனது வீட்டில் செயல்படாத மின் மோட்டாரை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு, மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதனையில் வரும் வழியிலேயே களஞ்சியம் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

மகன் இறந்த துக்கத்தில் அவரது தந்தை சேகா் (58) தனது வீட்டில் வியாழக்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இருவரது உடல்களும் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com