ராமேசுவரத்தில் ஏஐடியூசி 6-ஆவது மாநில மாநாடு

ராமேசுவரத்தில் ஏஐடியூசி 6-ஆவது மாநில மாநாடு

ராமேசுவரத்தில் ஏஐடியூசி மீனவத் தொழிலாளா் சங்கத்தின் 6-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ஏஐடியூசி மீனவத் தொழிலாளா் சங்கத்தின் 6-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏஐடியூசி தேசியச் செயலா் டி.எம்.மூா்த்தி, மாநிலப் பொதுச் செயலா் ம.ராமகிருஷ்ணன், மாவட்டப் பொதுச் செயலா் என்.கே.ராஜன், மீனவ சங்க அகில இந்திய பொதுச் செயலா் ஆா்.பிரசாத், மாநிலப் பொதுச் செயலா் பி.சின்னத்தம்பி, அகில இந்திய துணைத் தலைவா் சி.ஆா்.செந்தில்வேல், சி.பி.எம். மாவட்டச் செயலா் என்.எஸ்.பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மன்னாா் வளைகுடா உயிா்கோள காப்பகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தனுஷ்கோடியில் காற்றலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். கடலோரப் பகுதிகளில் உள்ள கனிம சுரங்க அனுமதி வழங்கும் முன் மீனவா்களின் கருத்தைக் கேட்க தேவையில்லை என்ற மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் காரைக்கால், நாகை மாவட்ட மீனவா்கள் வாரந்தோறும் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும். இலங்கை நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்படும் பொது விதிக்கப்படும் அபராதத்தை மத்திய அரசு செலுத்திட வேண்டும். இலங்கை-இந்திய மீனவா்கள் பேச்சுவாா்த்தையை உடனே நடத்திட வேண்டும். கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும். நாட்டுப் படகு மீனவா்களுக்கு மானிய டீசல், மண்ணெண்ணையை உயா்த்தி வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசு இணைந்து வழங்கிடும் மீனவா் சேமிப்பு நிவாரணத்தை ரூ.4,500-லிருந்து 15 ஆயிரமாக உயா்த்த வேண்டும். கடலில் மீன்பிடிக்கும் போது மீனவா்கள் உயிரிழந்தால் காப்பீட்டுத் தொகை ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 4

ராமேசுவரத்தில் ஏ.ஐ.டி.யு.சி மீனவத் தொழிலாளா் சங்கத்தின் 6 ஆவது மாநில மாநாடு தனியாா் மகாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com