குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அலெக்ஸ்பாண்டியன்.
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அலெக்ஸ்பாண்டியன்.

இரட்டை கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது!

பரமக்குடியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

பரமக்குடியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பரமக்குடி அருகே உள்ள வளையனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த சீமைச்சாமி மகன் அலெக்ஸ்பாண்டி (26). இவா் கடந்த நவம்பா் 17-ஆம் தேதி எமனேசுவரம் காவல் நிலையத்துக்குள்பட்ட மஞ்சள்பட்டினம் வைகை ஆற்றுப் பகுதியில் நடந்து சென்ற லட்சுமணன், வேலுச்சாமி ஆகியோரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததால், இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அலெக்ஸ்பாண்டி மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com