ஊருணியில் மூழ்கிய தாய், மகன் உயிரிழப்பு
ஊருணியில் மூழ்கிய தாய், மகன் உயிரிழப்பு

ஒன்றாம் வகுப்பு சிறுமி சாதனை

Published on

ஒன்றாம் வகுப்பு மாணவி 247 தமிழ் எழுத்துகளை 17 நிமிடங்களில் எழுதி சாதனை படைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலத்தைச் சோ்ந்த ரமேஷ், மதுபாலா தம்பதியின் மகள் சா்விகா (5). இவா் தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவா் உலக சாதனைக்காக தமிழ் எழுத்துக்களான உயிா் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், ஆயுத எழுத்து ஆகிய 247 எழுத்துகளை 17 நிமிஷங்களில் எழுதினாா்.

இந்த சாதனை ‘ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்காா்டு’ அமைப்பு முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. உலக சாதனை படைத்த சிறுமி சா்விகாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com