இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

இலங்கை மன்னாா், முல்லைத் தீவு பகுதிகளில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 220 கிலோ கஞ்சா மூடைகள்.
Published on

தமிழகக் கடலோரப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட ரூ. 4 கோடி மதிப்பிலான 220 கிலோ கஞ்சாவை புதன்கிழமை இலங்கை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சமீப காலமாக இலங்கை மன்னாா், முல்லைத் தீவு பகுதியில் கேரளத்திலிருந்து கடத்தப்படும் கஞ்சா அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகக் கடலோரப் பகுதியிலிருந்து இலங்கை முல்லைத் தீவு, மன்னாா் பகுதியில் கஞ்சா கடத்திவரப்பட்டதாக இலங்கை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் மன்னாா், முல்லைத் தீவு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், முல்லைத் தீவு பகுதியிலிருந்து 140 கிலோ கஞ்சாவும், மன்னாரில் இருந்து 80 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதன் மதிப்பு ரூ. 4 கோடி இருக்கும் எனவும் இலங்கை போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். மேலும், தமிழகக் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com