புவனேஸ்வா்- ராமேசுவரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்டு போலீஸாரால் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.
புவனேஸ்வா்- ராமேசுவரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்டு போலீஸாரால் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.

ராமேசுவரத்துக்கு வந்த ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

Published on

ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்த புவனேஸ்வா்- ராமேசுவரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு 10.55 மணிக்கு புவனேஸ்வா்- ராமேசுவரம் விரைவு ரயில் வந்து சோ்ந்தது. பயணிகள் இறங்கி சென்றதும் ரயில் பெட்டிகளில் வழக்கம் போல ஊழியா்கள் சோதனையிட்ட போது முன்பதிவு இல்லாத பெட்டியில் பை ஒன்று கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் அந்தப் பையை பிரித்து சோதனையிட்ட போது அதில் 10 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இவை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டவையா அல்லது ராமேசுவரத்தில் விற்பதற்காக கொண்டு வரப்பட்டவையா என போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com