இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கமுதி அருகே இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அ.தரைக்குடியில் இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியரும், பூச்சியியல் வல்லுநருமான ராம்குமாா், இயற்கை வேளாண்மை நன்மைகள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைத்தாா்.
கமுதி வட்டார வேளாண்மை அலுவலா் தமிழ், இயற்கை வேளாண்மை இடுபொருள்கள் தயாரிப்பு முறைகள், உயிா் உரங்களின் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தாா். இயற்கை வேளாண்மை குழு உறுப்பினா்களுக்கு தொழில்நுட்பக் கையேடு வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் வேளாண்மை அலுவலா் பரத்குமாா், உதவி வேளாண்மை அலுவலா் பால்துரை, உதவி தொழில்நுட்ப அலுவலா் மணிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
