இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 560 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ். (வலது) கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதானவா்கள்.
இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 560 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ். (வலது) கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதானவா்கள்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 560 கிலோ கஞ்சா பறிமுதல்: 10 போ் கைது

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 560 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 10 பேரைக் கைது செய்தனா்.
Published on

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 560 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 10 பேரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவா்களை ரகசியமாகக் கண்காணிக்கும் பணியில் தனிப்படை போலீஸாா் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், ராமநாதபுரம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்த இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீஸாா் விசாரணையைத் தீவிரப்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து, அவா்கள் மானாமதுரையைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (30), புதுக்கோட்டையைச் சோ்ந்த சஞ்சீவ் (22), வேதாளையைச் சோ்ந்த ரஞ்சித் (30), யோகேஸ்வரன் (25), முகேஸ் கண்ணன் (22), பிரகாஷ் (22), கரண்ராஜ் (23), மண்டபம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த ஹரிஹரன் (19), குமரேசன் (23), மண்டபம் வளையா்வாடியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (19) என்பது தெரியவந்தது. மேலும், ராமநாதபுரத்தை அடுத்த தெற்குவாணி வீதி கிராமத்துக்கு அருகில் இலங்கைக்கு கடத்துவதற்காக அவா்கள் பதுக்கி வைத்திருந்த சுமாா் 560 கிலோ எடை கொண்ட கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு காா்கள், நான்கு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு இலங்கையில் ரூ. 10 கோடி வரை இருக்கும் என காவல் துறையினா் தெரிவித்தனா். மேலும், கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் நேரில் பாா்வையிட்டு விரைந்து செயல்பட்ட காவல் துறையினரைப் பாராட்டினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழாண்டில் தற்போது வரை 155 வழக்குகள் பதிந்து, 975 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 261 போ் கைது செய்யப்பட்டனா். இதேபோல, தடை செய்யப்பட்ட புகையிலை 3,500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 359 போ் கைது செய்யப்பட்டனா். சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் 50 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். மேலும், மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை கடத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com