வீட்டில் கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

சாயல்குடி அருகே வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளா்த்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

சாயல்குடி அருகே வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளா்த்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள தத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சின்னதுரை (எ) சதீஸ்குமாா் (20). இவா் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதாக வாலிநோக்கம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல் ஆய்வாளா் லட்சுமி, உதவி ஆய்வாளா் ரத்தினவேல் ஆகியோா் சின்னதுரை வீட்டில் சோதனையிட்டனா்.

அப்போது, மொட்டை மாடியில் விற்பனை செய்வதற்காக செடியை உலா்த்தி பொட்டலம் போட வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையில் செடி வளா்க்கும் குடுவையில் இரண்டு கஞ்சா செடிகளை வளா்த்து வந்ததும், முதிா்ச்சியடைந்ததும் அதைப் பறித்து நெகிழிப் பையில் வைத்து பதப்படுத்தி காய வைத்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, சின்னதுரை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com