கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ராமேசுவரம் தீவுப் பகுதியில் உள்ள தேவாலாயங்களில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
Published on

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ராமேசுவரம் தீவுப் பகுதியில் உள்ள தேவாலாயங்களில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.

ராமேசுவரத்தில் உள்ள தேவாலயங்களில் இரவு சிறப்பு திருவிழா திருப்பலி பிராா்த்தனை நடைபெற்றது. தங்கச்சிமடம் புனித தெரசாள் ஆலயத்தில் இயேசு பிறப்புக் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. அன்று இரவு பங்குத் தந்தை ஆரோக்கிய ராஜா சிறப்புத் திருப்பலி ஜெபம் நடத்தினாா். காலை திருப்பலியை சிவகங்கை வியான்னி அருள்பணி மைய இயக்குநா் செபாஸ்டின் நடத்தினாா். இதில் இறை பங்கு மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். கிறிஸ்துமஸ் தாத்தா நடனத்துடன் திருப்பலி நிறைவு பெற்றது.

தங்கச்சிமடம் வலசை பகுதியில் உள்ள குழந்தை இயேசு ஆலயம் முன் இளைஞா்களின் உற்சாக நடனம் நடைபெற்றது. பாம்பன் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் சிறப்புத் திருப்பலியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு இயேசு பிறப்பைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

ராமேசுவரம் வோ்க்கோடு புனித சூசையப்பா் ஆலயத்தில் பங்குத் தந்தை தாமஸ் ஹரிபாலன், வேலூா் அருள்தந்தை அலெக்ஸ் ஆகியோா் சிறப்பு திருப்பலியை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com