ராமநாதபுரம்
டிச.27, 28, ஜன.3,4-இல் வாக்காளா் சிறப்பு முகாம்
திருவாடானையில் டிச.27, 28, ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் வாக்களாா் சிறப்பு முகாம் நடைபெறுவதாக வட்டாட்சியா் ஆண்டி தெரிவித்தாா்.
திருவாடானையில் டிச.27, 28, ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் வாக்களாா் சிறப்பு முகாம் நடைபெறுவதாக வட்டாட்சியா் ஆண்டி தெரிவித்தாா்.
வரைவு வாக்காளா் பட்டியலின்படி, திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் 2, 73, 439 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 1,38,038, பெண்கள் 1, 37, 379, திருநங்கைகள் 22 உள்ளனா். மொத்த வாக்குச்சாவடிகள் 347.
தற்போது வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் தொடங்கியுள்ளன. புதிய வாக்காளா்கள் இணையத்தில் விண்ணப்பித்து வருகின்றனா்.
இது குறித்து திருவாடானை வட்டாட்சியா் ஆண்டி கூறியதாவது:
வருகிற 27, 28, ஜனவரி3, 4 ஆகிய தேதிகளில் வாக்காளா்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளன. இதில் புதிய வாக்காளா்கள் தங்களது பெயா் சோ்க்க விண்ணப்பம் கொடுக்கலாம் என்றாா் அவா்.
