முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

கமுதியில் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கமுதி பேருந்து நிலையம் அருகே கமுதி பாஜக தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொதுச் செயலா் முருகன் தலைம வகித்தாா். பொருளாளா் திருமுருகன் முன்னிலை வகித்தாா்.

இதில் வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

வாஜ்பாய் கொண்டு வந்த திட்டங்கள், அவரது சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், அணிகளின் தலைவா்கள், சக்திகேந்திர பொறுப்பாளா்கள் கிளைத் தலைவா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com