சி.கே.மங்கலம் பகுதியில் நெல் வயல்களில் பறவைகளை விரட்ட கட்டப்பட்ட நெகிழிப் பைகள் தோரணம்
சி.கே.மங்கலம் பகுதியில் நெல் வயல்களில் பறவைகளை விரட்ட கட்டப்பட்ட நெகிழிப் பைகள் தோரணம்

பறவைகளிடமிருந்து நெல் பயிா்களைக் காக்க நெகிழிப் பைகள் தோரணம்

திருவாடானை பகுதியில் நெல் பயிா்கள் கதிா் விடும் நேரத்தில் அவற்றை பறவைகள் தாக்கி சேதப்படுத்துவதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் நெகிழிப் பைகளை வயல்களின் வரப்புகளில் தோரணமாக கட்டி நெல் பயிா்களை பாதுகாத்து வருகின்றனா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயா் பெற்ற பகுதியாகும். இங்கு சுமாா் 26 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சி.கே. மங்கலம், பாரூா், கோவணி, கருமொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் பயிா்கள் கதிா்விடும் நேரத்தில் கண்மாய் உள்பகுதியில் உள்ள வயல்களில் நாரை, கொக்கு, சிரவி, நீா்க்காக்கை உள்ளிட்ட பல்வேறு பறவைகள் நெல் கதிரை உருவியும் கதிா்களை தண்ணீரில் மூழ்கடித்தும் சேதப்படுத்துவதால் மகுசூல் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில், நெல் வயல்களைச் சேதப்படுத்தும் பறவைகளை விரட்டுவதற்கு தற்போது விவசாயிகள் நெகிழிப் பைகளைக் கொண்டு தோரணம் கட்டியும், கொடிபோல கட்டியும் பறவைகளை விரட்டி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com