ராமநாதபுரம்
ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.09 கோடி உண்டியல் காணிக்கை!
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.09 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை தெரிவித்தாா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.09 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அம்மன் சந்நிதி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ரூ. 2.09 கோடி கிடைத்துள்ளது. இதில் தங்கம் 85 கிராம், வெள்ளி 5 கிலோ, 111 வெளிநாட்டு பணத் தாள்கள் கிடைத்துள்ளன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையா்கள் ஞானசேகரன், ரவீந்திரன், முதல் நிலை செயல் அலுவலா்கள் முத்துச்சாமி, மாரியப்பன், மேலாளா் வெங்கடேஷ்குமாா், ஆய்வலா்கள் சிவக்குமாா், முருகானந்தம், ஆன்மிக பக்தா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
