ராமநாதபுரம்
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருவாடானை அருகேயுள்ள இளங்குன்றம் அலுங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (58). விவசாயி. இவரது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தன. இதனால், செவ்வாய்க்கிழமை மாலை மின் அளவீட்டுப் பெட்டியில் எலி மருந்து தடவிய தக்காளியை வைத்தாா்.
அப்போது, அந்தப் பெட்டியிலிருந்த மின்சாரம் அவா் மீது பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
