இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்த 5 போ்
இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்த 5 போ்

தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்த இலங்கைத் தமிழா்கள்

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் வந்தனா்.
Published on

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை வந்தனா். இவா்களிடம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இலங்கை கண்டியைச் சோ்ந்தவா் முகமது கியாஷ் (43). இவரது மனைவி பாத்திமா பஹானா (34), மகன் முகம்மது யாக்யா (12), இரட்டைக் குழந்தைகள் அலிஷா (4), அமீரா (4). முகமது கியாஷுக்கு தொழில் தொடா்பாக ரூ. 1.75 கோடி கடன் ஏற்பட்டதாம்.

இதனால், இலங்கையிலிருந்து ரூ. 3.80 லட்சம் கொடுத்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு திங்கள்கிழமை காலை வந்ததாக முகமது யாஷ் தெரிவித்தாா்.

கடலோரப் பாதுகாப்புக் குழும ஏடிஎஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், தனுஷ்கோடி கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலைய உதவி ஆய்வாளா் காளிதாஸ் தலைமையிலான போலீஸாா், அவா்கள் 5 பேரையும் பாதுகாப்பாக மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, இவா்கள் 5 பேரையும் மண்டபம் இலங்கைக் தமிழா் மறுவாழ்வு முகாமில் போலீஸாா் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com