ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன். 
ராமநாதபுரம்
பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
ராமநாதபுரத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 317 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா். மனுக்களை விசாரணை செய்து, உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா்சா.புகாரி, மாவட்டச் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்து கழுவன், மாவட்ட வழங்கல் அலுவலா் இரா.காசி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

