ராமநாதபுரம்
திருவாடானை பகுதியில் நாளை மின் தடை
திருவாடானை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (நவ. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் குமாரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாடானை, நகரிக்காத்தான் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், திருவாடானை, சி.கே. மங்கலம், பாண்டுகுடி, நகரிக்காத்தான், வெள்ளையபுரம், மங்கலகுடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூா், எட்டுகுடி, மல்லனூா், ஆண்டாஊரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், டி. நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா், பதனக்குடி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
