வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆய்வு

Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக படிவத்தை வழங்கி வருகின்றனா்.

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பட்டணம்காத்தான் ஊராட்சி, சேதுபதிநகா் பகுதியில் நடைபெற்ற இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தாா்.

அப்போது ராமநாதபுரம் வட்டாட்சியா் காளீஸ்வரன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com