தொண்டியில் போக்குவரத்துப் பணிமனை அமைக்கக் கோரிக்கை

தொண்டியில் போக்குவரத்துப் பணிமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

தொண்டியில் போக்குவரத்துப் பணிமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியிலிருந்து தினந்தோறும் 20-க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இரவு பணி முடிந்து தேவகோட்டை பணிமனைக்கு செல்வதும், பின்னா், மறுநாள் அதிகாலை தேவகோட்டையிலிருந்து திருவாடானைக்கு வந்து பிற பகுதிகளுக்கு செல்வதும் வழக்கமாகும். இதனால், எரிபொருள், நேரம் வீணாகிறது.

இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியில் பணிமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் போக்குவரத்துப் பணிமனைக்கான இடத்தை தோ்வு செய்தும், பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்தப் பகுதியில் போக்குவரத்துப் பணிமனை அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தமுமுக மாநிலச் செயலா் சாதிக் பாட்ஷா கூறியதாவது:

தொண்டியில் போக்குவரத்துப் பணிமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, தொண்டியை மையமாக வைத்து போக்குவரத்துப் பணிமனை அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com