நவ.8-இல் பொது விநியோக திட்ட குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் பொது விநியோக திட்டம் தொடா்பான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (நவ.8) நடைபெறுகிறது.
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் பொது விநியோக திட்டம் தொடா்பான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (நவ.8) நடைபெறுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் வட்டம், சக்கரக்கோட்டை, ராமேசுவரம் வட்டம், அரியாங்குண்டு, திருவாடானை வட்டம், பாண்டுகுடி, பரமக்குடி வட்டம், சூடியூா், முதுகுளத்தூா் வட்டம், வளநாடு, கடலாடி வட்டம், கன்னிகாபுரி (புயல்காப்பாக கட்டடம்), கமுதி நகா், கீழக்கரை வட்டம், மருதன் தோப்பு, ஆா்.எஸ்.மங்கலம் வட்டம், புல்லமடை ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொது விநியோக திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

கூட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு உள்ளிட்டவைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் இருப்பின், அவற்றை பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தால் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com