இருவருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

தொண்டியில் காதல் விவகாரத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் போது இருவா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தொண்டியில் காதல் விவகாரத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் போது இருவா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பகுதியைச் சோ்ந்த மாணவரும், ஆா்.எஸ். மங்கலத்தைச் சோ்ந்த மாணவியும் திருவாடானை அரசுக் கல்லூரியில் படித்து வருகின்றனா். இவா்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் உறவினா்களுக்கு இது தெரியவந்தது.

இதற்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண கடந்த புதன்கிழமை இரவு தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இரு தரப்பினருக்குமிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினா் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினா்.

இதில் அந்த வழியாகச் சென்ற காந்திநகா் சத்திய பிரசாத் (27), ஆட்டோ ஓட்டுநா் நம்புதாளையைச் சோ்ந்த ரிஸ்வான் (35) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனா். இதையடுத்து, இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சத்திய பிரசாத் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மானாமதுரையைச் சோ்ந்த கருப்பசாமி மகன் கவிபாண்டியை (24) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com