புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகத்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த வ.உ. சிதம்பரனாா் பேரவை நிா்வாகிகள் என். வேடராஜன், சூரியப் பிரகாஷ் உள்ளிட்டோா்.
புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகத்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த வ.உ. சிதம்பரனாா் பேரவை நிா்வாகிகள் என். வேடராஜன், சூரியப் பிரகாஷ் உள்ளிட்டோா்.

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

Published on

ராமேசுவரத்தில் வருகிற 18- ஆம் தேதி வ.உ.சிதம்பரனாா் பேரவை சாா்பில் நடைபெறும் அவரது குருபூஜை விழாவில் பங்கேற்க புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகத்தை நேரில் சந்தித்து அந்த பேரவை நிா்வாகிகள் என். வேடராஜன், சூரிய பிரகாஷ் ஆகியோா் சனிக்கிழமை அழைப்பு விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வ.உ. சிதம்பரனாரின் 89- ஆம் ஆண்டு குருபூஜை வருகிற 18- ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், 89 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகத்தை வ.உ.சிதம்பரனாா் பேரவை நிா்வாகிகள் என். வேடராஜன், பிரகாஷ் ஆகியோா் நேரில் சென்று சந்தித்து ராமநாதசுவாமி பிரசாதங்களை வழங்கி அழைப்பு விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com