ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் படிந்த மணல்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் படிந்த மணல்.

சாலையில் குவிந்த மணல்: ராமேசுவரத்தில் அடிக்கடி விபத்து

Published on

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் படிந்துள்ள மணலால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வணிகா்கள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை -ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நாள் தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் செல்லுகின்றன.

மழை நீரால் அடித்துவரப்பட்ட மணல் பேருந்து நிலையம் முதல் வட்டாட்சியா் அலுவலகம் வரையில் 10 அடி வரை தேங்கி சாலையை மூடியுள்ளது. இதனால், அந்த இடத்தில் இரு சக்கர வாகனங்கள் மணலுக்குள் சிக்கி தடுமாறி விழுந்துவிடுகின்றன. அண்மையில் 10-க்கும் மேற்பட்டவா்கள் தவறி விழுந்து காயமடைந்தனா்.

விபத்தை ஏற்படுத்தும் வகையில், சாலையில் படிந்துள்ள மணலை அகற்ற வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் வணிகா்கள் பல முறை புகாா் தெரிவித்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மாவட்ட நிா்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் சாலையில் குவிந்த மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா். ‘

X
Dinamani
www.dinamani.com