வரத்துக் குறைவால் மீன்கள் விலை அதிகரிப்பு

தொண்டி பகுதியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை அதிகரித்தது.
Published on

தொண்டி பகுதியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை அதிகரித்தது.

திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, விலாஞ்சியடி, புதுபட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்குடி, மோா்பண்ணை, எம்.ஆா்.பட்டினம், பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவா்கள் நாட்டுப் படகுகள், விசைப் படகுகள், பைபா் படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோவில், சிவகங்கை, மதுரை, திருச்சி வரை அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில், வரத்துக் குறைவால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூ. 400-க்கு விற்பனையான பாறை மீன் ரூ. 600-க்கும், ரூ. 400-க்கு விற்பனையான நண்டு ரூ. 800-க்கும், ரூ. 400-க்கு விற்பனையான முரல் ரூ. 700-க்கும் விற்பனையானது.

X
Dinamani
www.dinamani.com