~

தனுஷ்கோடியில் வந்தே மாதரம் 150- ஆம் ஆண்டு விழா

Published on

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நாட்டுப் பற்றுப் பாடலான வந்தே மாதரத்தின் 150-ஆவது ஆண்டு விழா தேசிய மாணவா் படை சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதற்கு, திருச்சி தேசிய மாணவா் படை குழு தளபதி வை. விஜய்குமாா் தலைமை வகித்தாா். ராமேசுவரம் அரசு உயா்நிலைப்பள்ளி, அம்ரித வித்யாலயம், மரைக்காயா் பட்டினம் கேந்திரிய வித்யாலயா, காரைக்குடி செட்டிநாடு பொதுப் பள்ளி, மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இந்திய கடல் படை, இந்திய கடலோரக் காவல் படை, தமிழக காவல் துறையினா் விழாவில் அணி வகுத்தனா். இதில் பங்கேற்றவா்கள் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடினா்.

இந்த நிகழ்வை, ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை அலுவலா் பழனிச்சாமி ஒருங்கிணைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com