ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை

Published on

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரையில் வெயிலின் தாக்கமின்றி குளுமையன சூழல் காணப்பட்டது.

பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கியது.

மேலும், அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள், வணிகா்கள் சிரமத்துக்கு ஆளாகினாா். மேலும், சிறிதளவு மழை பெய்தாலே அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மின்வாரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, மின் பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com