தினமணி செய்தி எதிரொலி: கோயில் தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்

தினமணி செய்தி எதிரொலி: கோயில் தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்

Published on

திருவாடானை ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வண்ண தீா்த்த தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் தினமணி செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டதையடுத்து, இந்தக் குளம் தற்போது தூய்மையாகக் காணப்படுகிறது. இதனால், பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் முன் வண்ண தீா்த்த தெப்பக்குளம் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் இந்த தெப்பக்குளத்தில் கால், கைகளைக் கழுவி விட்டுதான் கோயிலுக்குள் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், இந்தக் குளத்தில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதனால், இந்தப் பகுதியில் கடும் துா்நாற்றம் வீசியதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்தது. இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தினமணி நாளிதழில்

செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக ஊராட்சி நிா்வாகம் இந்தத் தெப்பக்குளத்தில் இறந்த மிதந்த மீன்களை அகற்றி, மருந்து தெளிக்கப்பட்டது. இதனால், இந்தத் தெப்பக்குளம் தற்போது தூய்மையாகக் காணப்படுவதால், பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com