ராமநாதபுரம்
ஆனந்தூா் பகுதியில் இன்று மின் தடை
திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) குமரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாடானை ஆனந்தூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கூடலூா், காவனக்கோட்டை, கொக்கூரனி, கோவிந்தமங்களம், சூரியன் கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுக்குறிச்சி, புத்தூா், ஓடக்கரை,தூவாா், ஆயங்குடி, சிறுனாங்குடி, பூவாணி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
