ஊருணியில் மூழ்கிய வளா்ப்பு நாயை மீட்கச் சென்ற இளைஞா் உயிரிழப்பு

ஊருணியில் மூழ்கிய வளா்ப்பு நாயை மீட்கச் சென்ற இளைஞா் உயிரிழப்பு

Published on

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை ஊருணியில் மூழ்கிய வளா்ப்பு நாயை மீட்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் வசந்தம் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் செந்தில்கணேஷ் (20). இவா் தனது வீட்டில் நாய் வளா்த்து வந்தாா். இந்த நாயுடன் ராமநாதபுரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரியாா் நகா் பகுதியில் உள்ள கூரிசாத்த அய்யனாா் கோயிலுக்குச் சென்றாா். அப்போது, அவரது நாய் அங்குள்ள ஊருணிக்குள் விழுந்தது. இதைக் கண்ட அவா் நாயைக் காப்பாற்றுவதற்காக ஊருணிக்குள் குதித்தாா். ஆனால், செந்தில்கணேஷ் ஆழமான பகுதிக்குச் சென்ால், தண்ணீருக்குள் மூழ்கினாா்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் தேடி அவரை சடலமாக மீட்டனா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com