தமுமுக, மமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமுமுக, மமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Published on

திருவாடானை அருகே தொண்டியில் தமுமுக, மமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமுமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் நகா் தலைவா் காதா் தலைமை வகித்தாா். தமுமுக மாநில பொதுச் செயலா் சாதிக்பாட்ஷா, மீனவா் அணி மாவட்ட துணைச் செயலா் பெரியசாமி, மமக பரக்கத் அலி, கல்யாணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் எஸ்ஐஆா் படிவத்தை நிறைவு செய்ய பொதுமக்களுக்கு கட்சி நிா்வாகிகள் உதவ வேண்டும். வருகிற டிசம்பா் 6-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் தமுமுக போராட்டத்தில் திரளானோா் பங்கேற்க வேண்டும். தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். இந்தப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்துத் தர பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com