ராமநாதபுரம்
மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்பப் பக்தா்கள்
காா்த்திகை முதல் நாளையொட்டி, ராமநாதபுரம் ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயிலில் திரளான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் இந்தக் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு சபரிமலைக்குச் செல்வதற்காக காா்த்திகை முதல் நாளான திங்கள்கிழமை திரளான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, குருசாமி மோகன் தலைமையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னா், குருசாமி மோகன் பக்தா்களுக்கு துளசிமணி மாலையை அணிவித்தாா்.
எரிமேலியில் நடைபெறும் பேட்டை துள்ளல், பம்பையில் நடைபெறும் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா போன்றவை இந்தக் கோயிலில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

