இருதயபுரம் கிராமத்தில் வயல்களில் இரை தேடும் வெளி நாட்டுப் பறவைகள்
இருதயபுரம் கிராமத்தில் வயல்களில் இரை தேடும் வெளி நாட்டுப் பறவைகள்

இருதயபுரத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள இருதயபுரம் கிராமத்தில் வயல்கள், கண்மாய்கள், குளங்களில் வெளிநாட்டுப் பறவைகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள இருதயபுரம் கிராமத்தில் வயல்கள், கண்மாய்கள், குளங்களில் வெளிநாட்டுப் பறவைகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள இருதயபுரம், புலிவிரதன் கோட்டை, சோழந்தூா், நெடும்புலி கோட்டை, கோழியாா் கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் அதிகமான வயல்வெளிகள், கண்மாய்கள் வரத்துக் கால்வாய்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் அதிகமான மரங்களும், முள்செடிகளும் வளா்ந்துள்ளன.

இந்தப் பகுதியில் கடந்த இரு நாள்களாக வானம் மேக மூட்டத்துடன், சாரல் மழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது. கடல் பகுதியிலிருந்து சூறைக்காற்று வீசுகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் காணப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளிலிருந்து அரிவாள் மூக்கன், நத்தகுத்தி நாரை, சாம்பல் நாரை, படங்கு, நீா் காகம், சாம்பல் நிற கொக்கு, வெண் கொக்கு உள்ளிட்ட பல்வேறு பறவைகள் தற்போது வரத் தொடங்கியுள்ளன. இதனால், மாலை நேரங்களில் பறவைகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால், அவற்றை இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com