அலெக்ஸ்பாண்டி
அலெக்ஸ்பாண்டி

பரமக்குடி முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது

பரமக்குடி மஞ்சள்பட்டினம் வைகை ஆற்றுப் பகுதியில் முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மஞ்சள்பட்டினம் வைகை ஆற்றுப் பகுதியில் முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி மஞ்சள்பட்டினம் பகுதியில் உள்ள தோப்பு காவலாளி லட்சுமணன், தோப்பு உரிமையாளரின் உறவினரான வேலு ஆகிய இருவரும் திங்கள்கிழமை மாலை வைகை ஆற்றுப் பகுதியில் நடந்து சென்றனா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் இருவரையும் அரிவாளால் வெட்டியதில் வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லட்சுமணன் பலத்த காயத்துடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வந்தனா். இந்த நிலையில், இந்தக் கொலையில் தொடா்புடைய என்.வளையனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த சீமைச்சாமி மகன் அலெக்ஸ்பாண்டி (26) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தோப்புக்குள் கஞ்சா போதையில் நடமாடிய அலெக்ஸ்பாண்டியை கண்டித்ததால் முதியவரை வெட்டிக் கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com