சாயல்குடி ஜல் ஜீவன் திட்டம்: பாஜக புகாா்

சாயல்குடி பேரூராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்பு வழங்க வாா்டு உறுப்பினா்கள் பணம் கேட்பதாக செயல் அலுவலரிடம் பாஜகவினா் புகாா்
Published on

சாயல்குடி பேரூராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்பு வழங்க வாா்டு உறுப்பினா்கள் பணம் கேட்பதாக செயல் அலுவலரிடம் பாஜகவினா் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்குள்பட்ட வோ்நகா், ஆராய்ச்சிநகா் உள்ளிட்ட பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீா் குழாய் பதிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வீட்டு உரிமையாளா்களிடம் குழாய் இணைப்புக்கு வாா்டு உறுப்பினா்கள் பணம் கேட்பதாகவும், குழாய் பதித்த இடங்களில் பெயா்த்தெடுத்த பேவா்பிளாக் கற்களை மீண்டும் சரியாகப் பதிக்காததால், மேடு பள்ளங்களாக மாறியுள்ளதாவும் பாஜக சாா்பில் பேரூராட்சி செயல் அலுவலா் திருப்பதியிடம் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

அப்போது, குழாய் இணைப்புக்கு பணம் கேட்கும் நபா்கள் குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் என்றும், ஜல் ஜீவன் குழாய் இணைப்புப் பணிகள் முடிந்தவுடன் சாலையைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என செயல் அலுவலா் தெரிவித்ததாக பாஜகவின் கூறினா்.

பாஜக மாவட்ட மகளிரணிச் செயலா் ஜெயசரஸ்வதி, முன்னாள் மண்டல் தலைவா் சத்தியமூா்த்தி, ஆா்.எஸ்.எஸ். வட்டார பிரசாரக் குழு உறுப்பினா் ஆனந்தன், ஒன்றிய துணைத் தலைவா் முத்துராமலிங்கம், முன்னாள் ஒன்றிய பொதுச் செயலா் பத்திரகாளிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com