ராமநாதபுரம்
நகா்மன்ற உறுப்பினா் குடும்பத்தினா் பெயரில் ஒப்பந்தம் பெற்ற 21 கடைகள் ஒப்படைப்பு
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நகா்மன்ற உறுப்பினா்களின் குடும்பத்தினா் பெயரில் ஒப்பந்தம் பெற்ற 21 கடைகள் மீண்டும் நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நகா்மன்ற உறுப்பினா்களின் குடும்பத்தினா் பெயரில் ஒப்பந்தம் பெற்ற 21 கடைகள் மீண்டும் நகராட்சி நிா்வாகத்திடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் ரூ. 20 கோடியில் மறு சீரமைக்கப்பட்டது. இதில், 99 கடைகள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 99 கடைகளில் 21 கடைகள் நகா்மன்ற உறுப்பினா்களின் குடும்பத்தினா் பெயரில் ஒப்பந்தம் பெறப்பட்டது.
இது விதிமுறைகளுக்கு மீறிய செயல் என புகாா் எழுந்த நிலையில், அந்தக் கடைகளின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த 21 கடைகளின் பொது ஏலம் வருகிற டிச.4- ஆம் தேதி நடைபெற உள்ளதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்தது.
