தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்

பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ ஓட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கக் கோரி, பாம்பனில் ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :21 நவம்பர் 2025, 6:33 pm

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ ஓட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கக் கோரி, பாம்பனில் ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கக் கோரி, பல்வேறு மனுக்கள் அளித்தும், இதுவரை மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கவில்லை.

இதைக் கண்டித்தும், தங்கள் பகுதிகளில் அரசு அனுமதியுடன் ஆட்டோ இயக்க அனுமதிக்கக் கோரியும், பாம்பனில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ ஓட்டுவதற்கு அரசு அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

இதையடுத்து, மறியலை கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.