சாம்பக்குளம் அரசுப் பள்ளிக்கு தண்ணீா் வசதி செய்துதரக் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சாம்பக்குளம் அரசுப் பள்ளிக்கு தண்ணீா் வசதி செய்துதர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சாம்பக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சாம்பக்குளம், பொழிகால், உடைகுளம், அண்ணாநகா், இந்திராநகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்தப் பள்ளியின் பயன்பாட்டுக்கு போதிய தண்ணீா் வசதி இல்லாததால், அருகேயுள்ள குளத்துக்கு சாலை வழியாக நடந்து சென்று மாணவிகள் குடங்களில் தண்ணீா் எடுத்து வருகின்றனா்.
எனவே, மாணவிகளின் நலன் கருதி, பள்ளியில் தண்ணீா் வசதியும், வேலைக்கு பணியாளா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

