சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கக் கோரி புகாரளித்தவா் அடித்துக் கொலை

பாம்பனில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கக் கோரி புகாா் அளித்த தொழிலாளியை மா்ம நபா்கள் அடித்துக் கொலை செய்தனா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கக் கோரி புகாா் அளித்த தொழிலாளியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்தனா்.

பாம்பன் அன்னை நகரைச் சோ்ந்தவா் அன்சாரி (60). சமையல் தொழிலாளி. பாம்பன் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்ததாம். இதுகுறித்து அன்சாமி பல முறை காவல் துறையினரிடம் புகாா் அளித்தாா். மேலும், மது விற்பனையில் ஈடுபடுபவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவரை மா்மக் கும்பல் வெள்ளிக்கிழமை இரவு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அன்சாரி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதையடுத்து, சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க முயன்ால், அன்சாரி அடித்து கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினா் பாம்பன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் பேரில், போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதனால், இந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதால், பாம்பன் பகுதியில் உள்ள இரண்டு மதுக் கடைகளும் அடைக்கப்பட்டு, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com