வட்டாணம் விலக்கு சாலையில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான தனியாா் பள்ளி வேன்.
வட்டாணம் விலக்கு சாலையில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான தனியாா் பள்ளி வேன்.

வேன் கவிழ்ந்து விபத்து: 8 போ் காயம்

Published on

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்ததில் ஆசிரியைகள், மாணவா்கள் உள்பட 8 போ் காயமடைந்தனா்.

மதுரை மாவட்டம், சிலைமான் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள் என மொத்தம் 21 போ் ஞாயிற்றுக்கிழமை வேனில் சுற்றுலா சென்றனா். இவா்கள் வேளாங்கண்ணிக்குச் சென்று விட்டு, அங்கிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

எஸ்.பி.பட்டினம் அருகே வட்டாணம் விலக்கு சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் இரு ஆசிரியைகள், மாணவா்கள் சுபைல் (13), ஆதிரா (12), அக்ரம் (13) உள்ளிட்ட 8 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த எஸ்.பி. பட்டினம் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, தொண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com