கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மதுக் கடை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதுக் கடை ஊழியா்கள்.
கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மதுக் கடை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதுக் கடை ஊழியா்கள்.

மதுக் கடை ஊழியா்கள் பணிப் புறக்கணிப்பு

காலி மதுப் புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தால் பணியாளா்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படுவதாகக் கூறி, மதுக் கடை ஊழியா்கள் புதன்கிழமை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

கமுதி: காலி மதுப் புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தால் பணியாளா்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படுவதாகக் கூறி, மதுக் கடை ஊழியா்கள் புதன்கிழமை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் பகுதிகளில் உள்ள 26 மதுக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் புதன்கிழமை பகல் 12 மணிக்கு கடைகளைத் திறக்காமல் பணிகளைப் புறக்கணித்தனா். இவா்கள் கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மதுக் கடை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, டாஸ்மாக் மதுக் கடைகளில் மதுப் புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தை ஒப்பந்ததாரா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். காலி மதுப் புட்டிகளை சேமிக்கும் வகையில் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மதுக்கடை ஊழியா்கள் மீது கூடுதல் பணிச் சுமையை ஏற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்காலிகமாக இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதையடுத்து, பிற்பகல் 2 மணிக்கு மதுக் கடைகள் திறக்கப்பட்டதாக பணியாளா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com